கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட தேதி: செப்டம்பர் 26, 2014

DRAGON DICTATION உடன் கூடிய SWYPE -க்கான இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தம்

இது உங்களுக்கும் (SWYPE மற்றும்/அல்லது DRAGON DICTATION பயன்பாடுகளைப் பயன்படுத்தும் தனிநபர் அல்லது நிறுவனம்), NUANCE COMMUNICATIONS, INC -க்கும் இடையேயான ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் ஆகும். ("NUANCE "). தயவு செய்து பின்வரும் வரையறைகளை கவனமாக வாசிக்கவும்.

SWYPE மென்பொருள் மற்றும் DRAGON DICTATION சேவை ஆகியவற்றை நிறுவவும், பயன்படுத்தவும் நீங்கள் இந்த இறுதிப்பயனர் உரிம ஒப்பந்தத்தின் ("ஒப்பந்தம்") வரையறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். "ஒப்புக்கொள்கிறேன்" என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தின் வரையறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த வரையறைகளையும், நிபந்தனைகளையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாத வரை SWYPE மென்பொருளையோ அல்லது DRAGON DICTATION சேவையையோ எந்த வகையிலும் நீங்கள் பயன்படுத்த இயலாது.

SWYPE மென்பொருள் மற்றும் DRAGON DICTATION சேவை குறிப்பிட்ட சில பயனர்/சேவையகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, இவை உரை மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கும் திறன் மட்டுமல்லாது பிற திறன்கள் உட்பட உரை உள்ளீடு மற்றும் பேச்சுக் கட்டளைகள் வழியாக கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களை அந்தக் கருவிகளின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்றன. பின்வரும் பொதுவான வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் NUANCE மற்றும் அதன் வழங்குநர்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறுமாறு செய்யும் ஏதேனும் கூடுதல் SWYPE மென்பொருள் உள்ளிட்ட SWYPE மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து, அதை நிறுவவும், பயன்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது ("மென்பொருள்"), இது உரை உள்ளீட்டு நடைமுறையை வழங்குகிறது மற்றும் ஒரு NUANCE அமைப்பில் ("சேவை") நிறுவப்பட்டுள்ள DRAGON DICTATION சேவையகப் பயன்பாடுகளைப் பயனர்கள் அணுகவும் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துதல், சேவையை அணுகுதல் ஆகியவற்றுடன் இணைந்த NUANCE-ஆல் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தைப் பயனர்கள் அணுகவும் அனுமதிக்கிறது.

1. உரிமம் வழங்குதல். மென்பொருளைத் தனியொரு கருவியில் மட்டுமே நிறுவிப் பயன்படுத்தவும், அந்தக் கருவியில் உள்ள மென்பொருள் வழியாக NUANCE மற்றும் அதன் வழங்குநர்களால் உங்களுக்கு கிடைக்கப்பெறுமாறு செய்யப்படும் மென்பொருள் மற்றும் சேவையில் உள்ள நாடுகள் மற்றும் மொழிகளில் மட்டும் சேவையை அணுகவும் ஒரு தனிப்பட்ட, பிரத்யேகமானது அல்லாத, மாற்ற இயலாத, துணை உரிமம் அளிக்க இயலாத, திரும்பப்பெற இயலும், வரம்புக்கு உட்படும் ஓர் உரிமத்தை NUANCE மற்றும் அதன் வழங்குநர்கள் உங்களுக்கு ("உரிமதாரர்") ஓர் இலக்குப் பொருள் குறியீடாக மட்டும் வழங்குகின்றனர். ஒரு"கருவி" என்பது http://www.nuancemobilelife.com என்பதில் அமைந்துள்ள, Nuance ஆல் அவ்வப்போது புதுப்பிக்கப்படக்கூடும் Nuance இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஓர் அங்கீகரிக்கப்பட்ட அலைபேசிக் கருவி ஆகும். மேலும் மொழிகள், விசைப்பலகைகள் அல்லது அகராதிகள் மட்டுமல்லாது பிறவும் உள்ளடங்கிய கூடுதல் மென்பொருள் பதிவிறக்கங்களையும் NUANCE உங்களுக்கு கிடைக்கப்பெறுமாறு செய்யும் என்பதையும், இது போன்ற கூடுதல் மென்பொருள் பதிவிறக்கங்களை இதன் கீழ் வழங்கப்பட்டுள்ள மென்பொருளோடு மட்டுமே பயன்படுத்தலாம் என்பதையும், இது போன்ற உங்களின் கூடுதல் மென்பொருள் பதிவிறக்கப் பயன்பாடு இந்த ஒப்பந்தத்தின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் செலுத்தும் எந்தக் கட்டணங்களுக்கும், ஒரு மூன்றாம் நபரால் (அதாவது Google,Amazon, Apple) விதிக்கப்படும் கட்டணங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள், உங்களுடைய பதிவிறக்கம் மற்றும் மென்பொருள் பயன்பாடு மற்றும் சேவை தொடர்பான இந்தக் கட்டணங்கள் அவ்வப்போது மாறுபடக்கூடும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்களுடைய மென்பொருள் அல்லது சேவைகளின் பயன்பாட்டுக்காக இது போன்ற மூன்றாம் நபர்களுக்கு அளிக்கப்படும் எந்த பணமளித்தல்களுக்கும் உரிய பணத்தை மீண்டும் அளிப்பதற்கான கடமைப் பொறுப்பு NUANCE -க்கு கிடையாது. மேலும் மென்பொருள் மற்றும் சேவை ஆகியவை தரவுகளை அனுப்பவும், பெறவும் உங்களுடைய கம்பியில்லா வலையமைப்பைப் பயன்படுத்தும் என்பதையும், மென்பொருள் மற்றும் சேவையின் அலைபரப்பு நேரம், தரவு மற்றும்/அல்லது பயன்பாடு ஆகியவற்றுக்கானக் கட்டணங்களை உங்களுடைய அலைபேசி இயக்குநர் மற்றும் பிற மூன்றாம் தரப்புகள் விதிக்கக்கூடும் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்.

2. உரிமதாரரின் கடப்பாடுகள்.

2.1. கட்டுப்பாடுகள். நீங்கள் (சட்டத்தால் அனுமதிக்கப்படுவதைத் தவிர): (a) NUANCE -ஆல் எழுத்துப்பூர்வமாக அனுமதிக்கப்படாமல் மென்பொருளைக் கொண்டு அல்லது சேவைக்கு ஏதேனும் தானியங்கி அல்லது பதிவுசெய்யப்பட்ட விசாரணைகளை சமர்ப்பித்தல்; (b) உங்களுடைய சொந்தப் பயன்பாடு அல்லாத பிறவற்றிற்கு மென்பொருளையும், சேவையையும் பயன்படுத்துதல்; (c) மென்பொருள் கொண்டு அல்லது மென்பொருள் அல்லாத பிற வழிகளில் சேவையை அணுகுதல்; (d) மென்பொருளை முழுமையாக அல்லது பகுதியாக நகல் எடுக்கவோ, மறு ஆக்கம் செய்யவோ அல்லது வேறு எந்த வகையிலும் பிரதி எடுக்கவோ கூடாது; (e) மென்பொருளில் உள்ள அல்லது சேவையில் உள்ள எந்த உரிமைகளையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல், துணை உரிமம் அளித்தல், விநியோகம் செய்தல், ஒதுக்கீடு செய்தல், மாற்றம் செய்தல் அல்லது வழங்குதல்; (f) மென்பொருளின் அல்லது சேவையின் வழித்தோன்றல் பணிகளை மாற்றியமைத்தல், மற்றொரு இயங்குதளத்திற்கு மாற்றியமைத்தல், மொழிபெயர்த்தல் அல்லது உருவாக்கம் செய்தல்; (g) ஏதேனும் வகையில் மென்பொருளின் அல்லது சேவையின் எந்த ஆதாரக் குறியீடுகளையும், அடித்தளக் கருத்துக்களையும் அல்லது நெறிமுறைகளையும் தொகுப்பு நீக்கம் செய்தல், பொறிமொழியை தொகு மொழியாக்கல், தொழில்நுட்பரீதியாக விரிவாகப் பகுப்பாய்வு செய்தல் அல்லது வரையறை செய்தல், மறு உருவாக்கம் செய்தல், அடையாளம் காண்தல் அல்லது கண்டுபிடிக்க முயற்சி செய்தல்; (h) மென்பொருளில் இருந்து எந்தத் தனியுரிமை அறிவிப்புகளையோ, விவரச்சீட்டுகளையோ அல்லது குறியீடுகளையோ அகற்றக் கூடாது; அல்லது (i) மூன்றாம் தரப்பினர்களால் கிடைக்கப்பெறுமாறு செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு எதிராக ஒப்பிடும் அல்லது தரநிலைப்படுத்தும் நோக்கங்களுக்காக மென்பொருளை அல்லது சேவையைப் பயன்படுத்துதல்.

3. சொத்து உரிமைகள்.

3.1. மென்பொருள் மற்றும் சேவை. அனைத்து காப்புரிமை, பதிப்புரிமை, வணிக இரகசியம், வணிகமுத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அறிவுசார் சொத்துரிமைகள் மட்டுமல்லாது பிற உரிமைகள் உட்பட மென்பொருளின் மீதான அனைத்து உரிமை, உரிமை மூலம் மற்றும் ஈடுபாடு ஆகியவை NUANCE மற்றும் அதன் உரிமம் வழங்குநர்களுக்குச் சொந்தமானது ஆகும் மற்றும் இது போன்ற உரிமைகளுக்கான மூலம் தனிப்பட்ட முறையில் NUANCE மற்றும்/அல்லது அதன் உரிமம் வழங்குநர்களுக்கு இருக்கிறது. மென்பொருளை அல்லது சேவையை அனுமதியின்றி நகல் எடுத்தல் அல்லது மேலே உள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்கத் தவறுதல் இந்த ஒப்பந்தமும் இதன் கீழ் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் தானாகவே முடிந்து போவதை விளைவிக்கும் மற்றும் இந்த விதிமீறலுக்கான அனைத்து சட்டரீதியான மற்றும் நியாயமானத் தீர்வுகளை இது NUANCE -க்கு கிடைக்கப்பெறுமாறு செய்யும்.

3.2. மூன்றாம் தரப்பு மென்பொருள். மென்பொருளானது அறிவிப்புகள் மற்றும்/அல்லது கூடுதல் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் தேவைப்படும் மூன்றாம் தரப்பு மென்பொருளைக் கொண்டிருக்கக்கூடும். இது போன்ற தேவையான மூன்றாம் தரப்பு மென்பொருள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும்/அல்லது கூடுதல் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் http://swype.com/attributions என்பதில் அமைந்ததுள்ளன மற்றும் இவை இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், பார்வைக் குறிப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் ஆக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம், நீங்கள் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள கூடுதல் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

3.3. பேச்சு மற்றும் உரிமத் தரவுகள் .

(a) பேச்சுத் தரவு. சேவையின் ஒரு பகுதியாக, பேச்சு அறிதலையும் சேவையின் பிற பகுதிகளையும் மற்றும் NUANCE-ன் பிற சேவைகள் மற்றும் பொருட்களையும் இயைபு செய்யவும், மேம்படுத்தவும், சீர்படுத்தவும் கீழே வரையறுக்கப்பட்டவாறு NUANCE பேச்சுத்தரவை சேகரித்துப் பயன்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் வரையறைகளையும், நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், சேவையின் ஒரு பகுதியாக NUANCE பேச்சுத் தரவை சேகரிக்கக்கூடும் என்பதையும், இது போன்ற தகவல்கள் இரகசியத்தன்மை குறித்த ஒப்பந்தங்களின் படி பேச்சு அறிதலையும், சேவையின் பிற பகுதிகளையும் மற்றும் NUANCE -ன் பிற சேவைகள் மற்றும் பொருட்களையும் இயைபு செய்யவும், மேம்படுத்தவும், சீர்படுத்தவும் NUANCE ஆல் அல்லது NUANCE -ன் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் மூன்றாம் தரப்பினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு மற்றும் ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவிக்கிறீர்கள். எந்தப் பேச்சுத் தரவிலும் உள்ள தகவல் மூலகங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் NUANCE பயன்படுத்தாது. "பேச்சுத் தரவு" என்பது இதன் கீழ் உங்களால் அளிக்கப்படும் அல்லது சேவை தொடர்பாக உருவாக்கப்படும் ஒலி கோப்புகள், தொடர்புடைய ஒலியியல் எழுதுமுறைகள் மற்றும் பதிவுக் கோப்புகள் எனப் பொருள்படும். நீங்கள் அளிக்கும் எந்தப் பேச்சுத் தரவுகளும் மற்றும் அனைத்து பேச்சுத் தரவுகளும் இரகசியமாக வைக்கப்படும் மற்றும் இவை நீதிமன்ற ஆணை போன்ற சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு NUANCE ஆல் வெளிப்படுத்தப்படலாம் அல்லது சட்டத்தால் தேவைப்படும் பட்சத்தில் அல்லது அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் ஓர் அரசு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தப்படலாம் அல்லது NUANCE ஆல் மற்றொரு நிறுவனத்திற்கு விற்கப்படும் நிகழ்வின் போதோ, மற்றொரு நிறுவனத்துடன் ஒன்றிணைக்கப்படும் நிகழ்வின் போதோ அல்லது மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தும் நிகழ்வின் போதோ வெளிப்படுத்தப்படலாம்.

(b) உரிமத் தரவு. மென்பொருள் மற்றும் சேவையின் ஒரு பகுதியாக, NUANCE மற்றும் அதன் வழங்குநர்கள் கீழே வரையறுக்கப்பட்டவாறு உரிமத் தரவுகளை சேகரிக்கவும், பயன்படுத்தவும் செய்கிறார்கள். மென்பொருள் மற்றும் சேவையில் உள்ள வழிவகையின் ஒரு பகுதியாக NUANCE உரிமத் தரவுகளை சேகரிக்கக்கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு மற்றும் ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவிக்கிறீர்கள். NUANCE -ன் பொருட்கள் மற்றும் சேவைகளை வளர்ச்சியடையச் செய்யவும், கட்டமைக்கவும், மேம்படுத்தவும் NUANCE -க்கு அல்லது NUANCE -ன் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் மூன்றாம் தரப்புகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு உரிமத் தரவுகள் இரகசியத்தன்மை தொடர்பான ஒப்பந்தங்களின் படி பயன்படுத்தப்படுகின்றன. உரிமத் தரவானது எந்தக் குறிப்பிட்ட தனிநபருடனும் நேரடியானத் தொடர்பை அனுமதிக்காத ஒரு வடிவத்தில் இருப்பதால் உரிமத் தரவானது தனிப்பட்ட தகவலாக கருதப்படமாட்டாது. "உரிமத் தரவு " என்பது உங்களுடைய மென்பொருள் மற்றும் உங்களுடைய கருவி குறித்த தகவல் எனப் பொருள்படும், உதாரணமாக: கருவியின் வணிகச்சின்னம், மாடல் எண், காட்சித் திரை, கருவியின் அடையாளம், IP முகவரி மற்றும் இது போன்ற தரவுகள்.

(c) மென்பொருள் மற்றும் சேவையை நீங்கள் பயன்படுத்துவன் மூலம் பேச்சுத் தரவு மற்றும் உரிமத் தரவு தொடர்பாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சேகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மற்றும் இந்த இரண்டு தரவுகளையும் NUANCE மற்றும் மூன்றாம் தரப்பு பங்குதாரர்களால் சேமிக்கப்படவும், செயலாக்கம் செய்யப்படவும், பயன்படுத்தப்படவும் யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும்/அல்லது பிற நாடுகளுக்கு மாற்றம் செய்வதும் இதில் உள்ளடங்கும்.

(d) பேச்சுத்தரவு மற்றும் உரிமத் தரவு ஆகியவை NUANCE -ன் பொருந்தக்கூடிய அந்தரங்க கொள்கைக்கு உட்பட்டது ஆகும். மேலும் தகவல்களுக்கு http://www.nuance.com/company/company-overview/company-policies/privacy-policies/index.htmஎன்பதில் உள்ள NUANCE -ன் அந்தரங்க கொள்கையைப் பார்க்கவும்.

4. ஆதரவு. மென்பொருள் மற்றும் சேவையை மதிப்பீடு மற்றும் சோதனை செய்யும் செயல்முறையை எளிதாக்கும் பொருட்டு, உரிமதாரர் http://www.nuancemobilelife.comஎன்பதில் உள்ள NUANCE -ன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கலாம். கூடுதல் ஆதரவுக்கு, உரிமதாரர் இது போன்ற ஆதரவை முன்சென்ற இணையதளம் மூலம் கோரலாம் மற்றும் NUANCE -ன் ஊழியர்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் NUANCE மின்நகல், மின்னஞ்சல் அல்லது வேறு வழிகள் மூலம் உரிமதாரருக்கு குறைபாடு தொடர்பாகவும் மற்றும் /அல்லது மென்பொருள் மற்றும் சேவையின் செயல்பாடுகள் மற்றும் அம்சங்களின் விளக்கம் தொடர்பாகவும் நியாயமான ஆதரவை வழங்கும். NUANCE ஆதரவு மையமானது உங்களுடைய கேள்விகளுக்கு 48 அலுவல் மணி நேரத்திற்குள் (வார இறுதி நாட்கள் மற்றும் சட்டப்படியான/நிறுவன விடுமுறைகள் நீங்கலாக) பதில் அளிக்கும்.

5. உத்திரவாதங்களுக்கான பொறுப்புத் துறப்பு. மென்பொருள் மற்றும் சேவையைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் பொருட்டு NUANCE மற்றும் அதன் உரிமம் வழங்குநர்கள் மற்றும் வழங்குநர்கள் மென்பொருளையும், சேவையையும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்குகின்றனர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். இதன் விளைவாக உங்களுடைய தரவையும், கணினி அமைப்புகளையும் இழப்பு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். NUANCE மற்றும் அதன் உரிமம் வழங்குநர்கள் மற்றும் வழங்குநர்கள் மென்பொருளையும், சேவையையும் "உள்ளபடியே" அனைத்து பிழைகளுடனும் மற்றும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லாமல் வழங்குகின்றனர். பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எல்லை வரை NUANCE மற்றும் அதன் உரிமம் வழங்குநர்கள் மற்றும் வழங்குநர்கள், எந்த விதமான வணிகத் தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருந்தும் தன்மை அல்லது சட்டத்தை மீறாதத் தன்மை தொடர்பான உத்திரவாதங்கள் உட்பட எந்தவிதமான வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்திரவாதங்களையும் குறிப்பாக அளிக்கவில்லை.

6. பொறுப்புடைமை வரம்பு. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எல்லை வரை, எந்த நிகழ்விலும் NUANCE மற்றும் அதன் அலுவலர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள், அதன் வழங்குநர்கள் அல்லது அதன் உரிமம் வழங்குநர்கள் மென்பொருளை அல்லது சேவையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இலாப இழப்பு, தரவு இழப்பு, பயன்பாட்டு இழப்பு, வணிகக் குறுக்கீடு அல்லது உள்ளடக்கும் செலவு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் மட்டுமல்லாது பிற சேதங்கள் உட்பட எந்த விதமான நேரடியான, மறைமுகமான, சிறப்பான, இடைவிளைவான, விளைவு சார்ந்த அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கும் பொறுப்பாகமாட்டார்கள். எனினும், சேதங்கள் ஏற்பட்டுவிட்டால், ஏதேனும் பொறுப்புடைமை கோட்பாட்டின் கீழ், அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அல்லது இது போன்ற சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் முன்னரே அறிந்திருக்க வேண்டும் என்ற போதிலும் சேதங்களுக்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

7. வரையறை மற்றும் முடித்துக் கொள்ளுதல். இந்த ஒப்பந்தமானது இந்த ஒப்பந்தத்தின் வரையறைகளையும், நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்வதில் இருந்து தொடங்கி, அதை முடித்துக்கொள்ளும் போது காலாவதியாகிறது. சேவையானது காலாவதியாகிவிட்டது அல்லது முடிக்கப்பட்டுவிட்டது என உங்களுக்கு அறிவிப்பதன் மூலம் எந்த காரணத்திற்காகவும் அல்லது காரணம் இல்லாமலும் NUANCE தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தையும் மற்றும்/அல்லது இதன் கீழ் வழங்கப்பட்ட உரிமங்களையும் முடித்துக்கொள்ளக்கூடும். இந்த ஒப்பந்தத்தின் எந்த வரையறைகளையும், நிபந்தனைகளையும் நீங்கள் மீறும் போது இந்த ஒப்பந்தம் தானாகவே முடிந்துவிடும். முடிக்கப்பட்டவுடன், மென்பொருளின் பயன்பாட்டை நீங்கள் உடனடியாக நிறுத்திக் கொண்டு மென்பொருளின் அனைத்து நகல்களையும் நீக்கிவிட வேண்டும்.

8. ஏற்றுமதி உடன்பாடு. நீங்கள் பின்வருமாறு எடுத்துரைக்கிறீர்கள் மற்றும் உத்திரவாதம் அளிக்கிறீர்கள் (i) நீங்கள் அமெரிக்க அரசின் வணிகத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நாட்டில் அல்லது அமெரிக்க அரசாங்கத்தால் "தீவிரவாத ஆதரவு" நாடாக அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டில் இல்லை; மற்றும் (ii) நீங்கள் அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை.

9. வணிகச் சின்னங்கள். மென்பொருள் அல்லது சேவையில் உள்ளடங்கியுள்ள அல்லது அவற்றால் பயன்படுத்தப்பட்ட மூன்றாம் தரப்பு வணிகச் சின்னங்கள், வணிகப் பெயர்கள், பொருட்களின் பெயர்கள் மற்றும் முத்திரைகள் ("வணிகச் சின்னங்கள்") சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் வணிகச் சின்னங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வணிகச் சின்னங்கள் ஆகும் மற்றும் இது போன்ற வணிகச் சின்னங்களைப் பயன்படுத்துதல் வணிகச் சின்ன உரிமையாளரின் நன்மையை எடுத்துக்கொள்வதாக அமையும். இது போன்ற வணிகச்சின்னங்களைப் பயன்படுத்துதல் தகவல் மாற்றத்தை குறிப்பிடுவதற்காக உத்தேசிக்கப்பட்டதாகும் மற்றும் இது பின்வருவனவற்றை உள்ளடக்காது: (i) அது போன்ற நிறுவனத்துடன் NUANCE –ன் இணைந்த செயல்பாடு அல்லது (ii) NUANCE –ன் அது போன்ற நிறுவனம் மற்றும் அதன் பொருட்கள் அல்லது சேவைகளை ஏற்பிசைவு செய்தல் அல்லது அங்கீகரித்தல்.

10. முறைப்படுத்தும் சட்டம். இந்த ஒப்பந்தமானது அதன் சட்டரீதியான கொள்கைகளில் உள்ள முரண்பாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாசாச்சூசெட்ஸ் காமன்வெல்த் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக எழும் எந்த சர்ச்சைக்கும் மேலே சொல்லப்பட்டுள்ள காமென்வெல்த்தின் பிரத்யேகமான கூட்டாட்சி மற்றும் மாநில நீதிமன்றங்களின் ஆளுகை எல்கைக்கு இதன் வாயிலாக நீங்கள் உட்படுத்தப்படுகிறீர்கள். சரக்குகளை சர்வதேச அளவில் விற்பனை செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த சாசனத்தால் இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தப்படவில்லை மற்றும் அதன் பயன்பாடு இதன்வாயிலாக வெளிப்படையாக நீக்கப்படுகிறது.

11. மாற்றத்திற்கு உட்படும் வரையறைகள். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி உட்பட இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பமிடும் போது நீங்கள் அளித்த முகவரிக்கு நியாயமான அறிவிப்பு அளித்தபின்பு இந்த ஒப்பந்தத்தின் வரையறைகளையும், நிபந்தனைகளையும் NUANCE அவ்வப்போது மாற்றக்கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தில் செய்யப்படும் இது போன்ற மாற்றங்களை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனில், மென்பொருள் மற்றும் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதே உங்களுக்கான ஒரே தீர்வாக இருக்கும். இது போன்ற மாற்றத்தை நீங்கள் திறனாய்வு செய்யும் பொருட்டு NUANCE உங்களுக்கு நியாயமான அறிவிப்பு அளித்த பின்பு நீங்கள் தொடர்ந்து மென்பொருள் அல்லது சேவையின் எந்தப் பகுதியையும் பயன்படுத்திக்கொண்டிருப்பது இது போன்ற மாற்றத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.

12. பொதுவான சட்ட வரையறைகள். NUANCE -ன் எழுத்துப்பூர்வமான முன் ஒப்புதல் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள எந்த உரிமைகளையும் அல்லது கடமைப் பொறுப்புகளையும் நீங்கள் ஒதுக்கீடு செய்யவோ அல்லது வேறுவகையில் மாற்றம் செய்யவோ கூடாது. இந்த ஒப்பந்தம் உங்களுக்கும், NUANCE க்கும் இடையேயான முழுமையான ஒப்பந்தம் ஆகும் மற்றும் இது மென்பொருள் தொடர்பான எந்த பிற தகவல் பரிமாற்றங்களையும் அல்லது விளம்பரங்களையும் மாற்றியமைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் வழிமுறைகள் செல்லுபடியாகாமல் வைக்கப்பட்டிருந்தால் அல்லது அமல் செய்யப்பட இயலாமல் போனால், அந்த வழிமுறையின் செல்லுபடியாகாதத் தன்மை மற்றும் அமல் செய்ய இயலாத தன்மைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அளவு அந்த வழிமுறை தனிப்பட்ட முறையில் மாற்றியமைக்கப்படும் மற்றும் இந்த ஒப்பந்தத்தில் மீதமுள்ளவை முழு வீச்சிலும், நடைமுறையிலும் தொடர்ந்து நீடிக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் உரிமை அல்லது வழிமுறையை NUANCE செயல்படுத்த அல்லது அமல்படுத்த தவறினால் அது அந்த உரிமையை அல்லது வழிமுறையைத் தள்ளுபடி செய்வதை உள்ளடக்காது. இந்த ஒப்பந்தத்தின் 2, 3, 5, 6, 7, 9, 10, மற்றும் 12 ஆம் பிரிவுகள் இந்த ஒப்பந்தம் காலாவதியாகுவதை அல்லது முடிக்கப்படுவதைத் தடுக்கும்.